உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருட்டு

Published On 2023-08-19 11:57 IST   |   Update On 2023-08-19 11:57:00 IST
  • மாயனூர் அரசுப் பள்ளியில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருடப்பட்டு உள்ளது
  • மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

கரூர்,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் கட்டிடங்களை புனரமைக்கும் பணியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கரூர் மாவட்டம், எஸ்.வெள்ளாளப்பட்டி அருகே நரி கட்டியூர் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராமசாமி (வயது 30) என்பவர் மேற் பார்வையாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராமசாமி, அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள், ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News