உள்ளூர் செய்திகள்
பெண்களிடம் தகராறு செய்தவர் கைது
- கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சியில் பெண்களிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் நிரஞ்சனா சிற்றரசன் (32). அதே பகுதியைச் சேர்ந்த அத்தை மகனான வேலு என்கிற வேல்முருகன் (42) என்பவருக்கும் நிரஞ்சனா சிற்றரசன் என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் தேங்காய் வெட்டுவது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் வேலு என்கிற வேல்முருகன், நிரஞ்சனா சிற்றரசன் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது தாயாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து நிரஞ்சனா சிற்றரசன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து வாய் தகராறில் ஈடுபட்ட வேலு என்கிற வேல்முருகனை கைது செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.