உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்து டிரைவர் தற்கொலை
- கிணற்றில் விழுந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் புலியூர் அருகே உள்ள வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 32) கார் டிரைவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக நோய் பாதிப்பு அதிகரித்து பெரும் அவதிக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த தமிழ்மணி நேற்று வெங்கடாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த பசுபதிபாளையம் போலீசார் தமிழ் மணியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.