உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியால் மாற்று பாதையில் சென்று உடல் தகனம்

Published On 2022-08-23 09:10 GMT   |   Update On 2022-08-23 09:10 GMT
  • அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியால் மாற்று பாதையில் சென்று உடல் தகனம் செய்தனர்
  • மூதாட்டி உடலை எடுத்து ெசல்ல எதிர்ப்பு

கரூர்:

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகேயுள்ள ராசாகவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் மனைவி ராஜம்மாள் (80). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருக்கு கோவிந்தன் நிலத்தை விற்பனை செய்துள்ளார். அப்போத கோவிந்தன் வண்டி பாதை பாத்தியம் உள்ளது என தெரிவித்த நிலையில் நடந்து செல்ல மட்டுமே பாத்தியம் உள்ளது என கருப்பண்ணன் எழுதி வாங்கிவிட்டதாக தெரிகிறது.

உடல் நலக்குறைவு காரணமாக ராஜம்மாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவர் உடலை நேற்று சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முற்பட்டபோது அருகே குடியிருக்கும் கருப்பண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடலை எடுத்து செல்லும் பாதையில் ட்ராக்டர், மரம், செடிகளை போட்டு தடுப்பு ஏற்படுத்தி தங்கள் நிலத்தின் வழியாக உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ராஜம்மாளின் உறவினர்கள் கருப்பண்ணனிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த கரூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வெள்ளியணை போலீஸார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதனால் ராஜம்மாள் உடலை உறவினர் வீடு மற்றும் ஆத்துவாரி வாய்க்கால் வழியாக மாற்று பாதையில் மயானத்திற்கு எடுத்து சென்று தகனம் செய்தனர்.

Tags:    

Similar News