உள்ளூர் செய்திகள்

ஆசிரியை மாயம்

Published On 2023-07-10 14:14 IST   |   Update On 2023-07-10 14:14:00 IST
  • கரூர் அருகே ஆசிரியை மாயமாகி உள்ளார்
  • தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை

கரூர்,

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது- மகள் பிரியா (வயது 24). காக்காவாடியில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற, ஆசிரியை பிரியா வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை என்பதால், தந்தை ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News