உள்ளூர் செய்திகள்
கரூர் அருகே டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை
- கரூர் அருகே டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்,
கரூர் பசுபதிபாளையம் அடுத்துள்ள திருமாநிலையூரைச் சேர்ந்தவர் டெய்லர் சரவணபூபதி (வயது 38). இவர் கடந்த சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்துக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று திருமாநிலையூரில் உள்ள உறவினர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து உறவினர்கள் பசுபதிபாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.