உள்ளூர் செய்திகள்
வேலாயுதம்பாளையம் பகுதிகளில் திடீர் மழை
- வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பரவலாக திடீர் மழை பெய்தது
- குளிர்ச்சியான சீதோஷணம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், கட்டிப்பாளையம், நத்தமேட்டுப்பாளையம், பாலத்துறை, வேலாயுதம்பாளையம், காகித ஆலை, புன்னம் சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், கந்தம்பாளையம், திருக்காடுதுறை, கரைப்பாளையம், முத்தனூர், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டது. கிராமப்புறங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெயிலின் தாக்கம் காரணமாக வாடிய நிலையில் இருந்த பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.