உள்ளூர் செய்திகள்
பட்டியில் அடைக்கப்பட்ட ஆடு மாயம்
- பட்டியில் அடைக்கப்பட்ட ஆடு ஒன்றை காணவில்லை
- போலீசில் புகார் கொடுத்தார்
- வழக்கு பதிவு செய்து விசாரணை
கரூர்,
க.பரமத்தி அடுத்த நஞ்சைகாள குறிச்சி பகுதியில் வசிப்பவர் புக்கராண்டி (வயது 60). இவர் சம்பவத்தன்று பட்டியில் அடைக்கப்பட்ட தனது ஆடு ஒன்றை காணவில்லை என சின்னதாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.