உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

Published On 2023-10-21 12:30 IST   |   Update On 2023-10-21 12:30:00 IST
  • கரூர் மாவட்டத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள அஷ்டா தச புஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி, சரஸ்வதிக்கு நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு மகா அபிஷேக ஆராதனை அலங்கார சர்வ லோக ஷேமம் பிராத்தனை நடைபெற்றது.புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவிலில் நவராத்திரி 6- நாளை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரிஅம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

அதேபோல் சேமங்கி மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன் ,பேரூர் அம்மன் கோவில்,திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில்,அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன், ,உப்பு பாளையம் மாரி யம்மன்,புன்னம் மாரியம்மன் ,பகவதி அம்மன்,பே ரூர்அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன் ,பகவதி அம்மன், குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார அம்மன் கோவில்களில் நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News