அரசு பள்ளிக்கு 'புகையிலை இல்லா கல்வி நிறுவனம்' சான்றிதழ்
- அரசு பள்ளிக்கு ‘புகையிலை இல்லா கல்வி நிறுவனம்’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
- சான்றிதழை சுகாதார ஆய்வாளர் வழங்கினார்
கரூர்,
புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்ப டுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை விளக்கி அவற்றை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களும் "புகையிலை இல்லா கல்வி நிறுவனம்" என்ற சான்றிதழை பெற அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆய்வு செய்து சான்று கரூர் கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்யப்பட்டு, "புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி" 'என்ற பதாகைகள் வைக்கப்பட்டன. புகையிலை தடுப்பு சட்டத்தை விளக்கி பள்ளி வளாகத்தில் புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு, மீறி பயன்படுத்தினால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.fileimaஇந்த நடவடிக்கையின் படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு "புகையிலை இல்லா கல்வி நிறுவனம்" என்ற சான்றிதழை சுகாதார ஆய்வாளர் கோகுல் ராஜ், தலைமை ஆசிரியர் சாகுல் அமீதுவிடம் பள்ளிக்கு நேரில் வந்து வழங்கினார்.