கரூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு
- கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு நடத்தினர்
- மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ளும் உரிமத்தை விரைந்து வழங்கிட வேண்டும்
கரூர்:
கரூர் மாவட்டத்தில் புதிதாக 4 மணல் குவாரிகளை திறக்க அரசு உத்தரவிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் அரசு அறிவித்த 4 மணல் குவாரிகளை விரைவில் திறக்க வேண்டும், வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்துவதைத் தடுத்திட வேண்டும்.
மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ளும் உரிமத்தை விரைந்து வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வி.கந்தசாமி தலைமையில் கரூர் நீர் வள ஆதாரத்துறை அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்கள் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சி.ஆர்.ராஜாமுகமது, சிஐடியு சி.முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.