உள்ளூர் செய்திகள்

விற்பனை மையம் திறப்பு

Published On 2023-11-02 13:56 IST   |   Update On 2023-11-02 13:56:00 IST
  • கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது
  • கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா திறந்து வைத்து பார்வையிட்டார்

கரூர்,

கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை மையம் திறக்கப்பட்டது. கோவாப்மார்ட் என்ற இந்த விற்பனை நிலையம் மற்றும் இசேவை மையம் ஆகியவற்றை கரூர் ஜவஹர் பஜாரில், கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா திறந்து வைத்து பார்வையிட்டார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களும் கோவாப்மார்ட்டில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இசேவை மையமும் துவங்கப்பட்டுள்ளது. இந்த இசேவை மையத்தில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களும் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பெற்றுப்பயனயடைலாம் எனவும் இணைப்பதிவாளர் தெரிவித்தார். திறப்பு விழாவில் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநரும், பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளருமான அபிராமி, கரூர் சரக துணைப்பதிவாளர் ஆறுமுகம் மற்றும் சங்கப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News