உள்ளூர் செய்திகள்

ஆட்டு வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2023-09-06 13:46 IST   |   Update On 2023-09-06 13:46:00 IST
  • ஆட்டு வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை, பணம் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
  • பட்டப் பகலில் துணிகரம்

கரூர்:

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள காருடையான் பாளையம் மாலப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 57).

விவசாயியான இவர் ஆடு வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று காலை 10.30 மணிக்கு அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி சர்மிளாவுடன் கரூருக்கு ஒரு வேலை விஷயமாக சென்றார். பின்னர் கணவன் மனைவி இருவரும் பிற்பகல் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வீட்டின் கதவு பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் எடை கொண்ட

2 தங்க நாணயங்கள் மற்றும் ஆடு வாங்க வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து செல்வராஜ் க. பரமத்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பட்டப் பகலில் ஆடு வியாபாரி வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News