மகளிர் சுய உதவி குழுவுக்கு சுழல் நிதிக்கடன்
- மகளிர் சுய உதவி குழுவுக்கு சுழல் நிதிக்கடன் வழங்கப்படும்
- கரூர் மாவட்டம் கலெக்டர் பிரபு சங்கர் அறிவித்து உள்ளார்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கரூர் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட் சிகளில் வசிக்கும் 18 வயது நிரம்பிய ஏழை குடும்பங்களை சேர்ந்த மகளிரை கொண்டு புதிதாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட உள்ளது. புதிதாக துவங்கப்படும் குழுக்களுக்கு சுழல்நிதியாக ரூ.10ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.2லட்சம் முதல் 20 லட்சம் வரை வங்கி கடன் பெற்றுத் தரப்படும். இந்த கடனிற்கு 7 சதவீதத்திற்கு மேல் வட்டி மானியமும் வழங்கப்படும். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மாநக ராட்சி, பள்ளப்பட்டி, புகளூர், குளித்தலை நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் உள்ள இதுவரை மகளிர் குழுவில் இணையாத பெண்கள் உடனடியாக மகளிர் குழுவில் இணைந்து அனைத்து பயன்களையும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.