உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க கோரிக்கை

Published On 2022-10-25 11:49 IST   |   Update On 2022-10-25 11:49:00 IST
  • கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • ஒன்றியத்தில் எந்த கல்லூரியும் இல்லை.

கரூர்:

காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில்,

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. குளித்தலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிள் உள்ளன. அரவக்குறிச்சியிலும் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. கிருஷ்ணராயபுரம் தொகுதியின் தெற்கு பகுதியான கடவூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காணியாளம்பட்டியில் அரசு பாலிடெக்னிக், தரகம்பட்டியில் அரசு கலை கல்லூரி ஆகியன செயல்படும் நிலையில், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் எந்த கல்லூரியும் இல்லை. கரூர் மாவட்ட வேளாண் கல்லூரி தற்போது கரூர் மாநகரின் பல்நோக்கு மைய கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. வேளாண் கல்லூரிக்கு 200 ஏக்கரில் இடம் வேண்டும். எனவே காவிரி பாசனப் பகுதியான கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு வேளாண் கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News