உள்ளூர் செய்திகள்

கரூரில் பருவ மழைக்கு முன்பாகவே கடும் பனிப்பொழிவு

Published On 2022-12-01 14:50 IST   |   Update On 2022-12-01 14:50:00 IST
  • பருவ மழைக்கு முன்பாகவே கரூரில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது
  • பொதுமக்கள் கடும் அவதி

கரூர்:

அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலக்கட்டத்தில் பெய்யும் மழைதான் ஆண்டின் சராசரி மழையளவான 652.20 எட்ட உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் 11 - தேதி அன்று ஒரு நாள் மட்டுமே மாவட்டம் முழுவதும் மிகப் பலத்த மழை பெய்தது. அதற்கு பிறகு கருர் மாவட்டத்தில் மழை எதுவும் பெய்யவில்லை. ஆனால், மழைக்கு பதி லாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகுதான் பனி பொழிவு இருக்கும்.

ஆனால், வடகிழக்கு பருவமழை சீசனிலேயே பனிப் பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழையின் காலம் ஒரு மாதமே உள்ள நிலையில், இனி வரும் நாட்களில் மழை பெய்யுமா? என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், அதிகாலை

4மணி முதல் 8மணி வரை பனியின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர்கள், வேலைக்கு செல்லும் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். எனவே, புயல் சின்னம் உருவாகி மழை வரும் பட்சத்தில்தான் பனியின் தாக்கம் குறையும் என்பதால் அனைத்து தரப்பினர்களும் மழையை எதிர் நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News