உள்ளூர் செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
- கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கரூர்:
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தியெம்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர் நடராஜர் மற்றும் நந்தி பகவானுக்கு மஹா தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.