உள்ளூர் செய்திகள்

சரக்கு வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்

Published On 2023-08-08 13:17 IST   |   Update On 2023-08-08 13:17:00 IST
  • குளித்தலை அருகே சரக்கு வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்
  • மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

கரூர்,

குளித்தலை அடுத்த, தோகை பஞ்சாயத்து, வெள்ளப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 62). இவர் கடந்த, 5ம் தேதி மதியம், 12:00 மணிக்கு, தோகைமலை - திருச்சி நெடுஞ்சாலையில், தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த, 'பொலிரோ பிக்கப்' வேன், செல்லம்மாள் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். தோகை மலை போலீசார், சரக்கு வாகன டிரைவர், தோகைமலையை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News