உள்ளூர் செய்திகள்

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் புதிய ஸ்மார்ட் வகுப்பறை-எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2022-07-01 16:05 IST   |   Update On 2022-07-01 16:05:00 IST
  • கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய ஸ்மார்ட் வகுப்பறையை மாணிக்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
  • இப்பள்ளியில் ஸ்மார்ட், ஏசி வகுப்பறைகள், ஏசி ஆய்வகம், கணினி ஆய்வகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு இப்பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது

கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பொய்யாமணியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இன்னும் 4 ஆண்டுகளில் நூறாண்டை கொண்டாட உள்ள இப்பள்ளி கடந்த 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 95 ஆண்டுகளான மிகப்பழமையான பள்ளிகளில் ஒன்றாகும். பழமையான இப்பள்ளியில் தற்போது அனைத்து புதுமைகளும் இடம்பெற்றுள்ளன.

இப்பள்ளியில் ஸ்மார்ட், ஏசி வகுப்பறைகள், ஏசி ஆய்வகம், கணினி ஆய்வகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு இப்பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.

நிகழாண்டில் 255 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு கரேத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 5 பேர் பிளாக் பெல்ட் பெற்றுள்ளனர். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுள்ளனர்.

மேலும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வாரத்திற்கு 3 நாட்கள் பரதம், குரலிசை, மிருதங்கள், கீ போர்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்படி பல புதுமைகளை கொண்ட இப்பள்ளியில் ஏற்கனவே ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உள்ள நிலையில் கூடுதலாக, குளித்தலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சத்தில் தொடுதிரை வசதியுடன் கூடிய மெய்நிகர் (ஸ்மார்ட்) அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை குளித்தலை எம்எல்ஏ ரா.மாணிக்கம் திறந்து வைத்தார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேன்மொழி, வட்டாரக்கல்வி அலுவலர் ப.சக்திவேல், குளித்தலை வட்டார வளர்ச்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன்,

பொய்யாமணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புனிதா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி அன்புச்செல்வி, தலைமை ஆசிரியர் சீ.செ.முத்துலெட்சுமி, ஆசிரியர் அ.பூபதி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News