உள்ளூர் செய்திகள்
மணவாசி பள்ளிக்கு 'புதிய பாரத எழுத்தறிவு' விருது
- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், மணவாசி நடுநிலை பள்ளிக்கு ‘புதிய பாரத எழுத்தறிவு’ விருது வழங்கப்பட்டு உள்ளது
- எழுதபடிக்கத்தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டது
கரூர்,
தமிழகத்தில், மத்திய அரசு சார்பில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில், 'புதிய பாரத எழுத்தறிவு' திட்ட செயல்படுத்தப்படுகிறது. இதில், எழுத்தறிவு மட்டுமல்லாது வங்கி ஏ.டி.எம்., அஞ்சலக பயன்பாடு குறித்து பயிற்சிகள் தரப்படுகிறது. இதில், மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும் மையம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மணவாசி நடுநிலைப்பள்ளி சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரைச்செல்வி, தலைமை ஆசிரியர் தேன்மொழி தன்னார்வலர் வசந்தி ஆகியோருக்கு, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா வாழ்த்து தெரிவித்தார்.