புன்னம் சத்திரம் அருகே சேவல் சண்டை
- புன்னம் சத்திரம் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது
- 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 4 பேரை வேலாயுதம்பாளையம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே அதியமான் கோட்டை பகுதியில் உள்ள ஒரு வாய்க்கால் மேட்டில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்திக் கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்குள்ள வாய்க்கால் மேட்டில் சேவல் காலில் கத்தியை கட்டி பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்களை சுற்றி வளைத்த போது மூன்று பேர் சிக்கிக்கொண்டனர். மற்ற 4 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.அவர்களிடமிருந்து சண்டைக்கு பயன்படுத்திய 2சேவல் கோழிகள்,பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர். 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.