உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் லாரி புகுந்து 2 பேர் பலி - டிரைவருக்கு 3 ஆண்டு சிறை

Published On 2022-10-16 14:45 IST   |   Update On 2022-10-16 14:45:00 IST
  • கரூர் அருகே திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த வர் செல்வகனி, (வயது42)லாரி டிரைவர்.
  • விபத்தில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணி(57) கரூர் ராயனுாரை சேர்ந்த கந்தசாமி (58), ஆகியோர் உயிரிழந்தனர்.

கரூர்

கரூர் அருகே திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த வர் செல்வகனி, (வயது42)லாரி டிரைவர். கடந்த, 2011 மே மாதம் கரூரில் மாரியம்மன் கோவில் திருவிழா வையொட்டி, கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா நடந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக செல்வ கனி ஓட்டி சென்ற லாரி, கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. விபத்தில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணி(57) கரூர் ராயனுாரை சேர்ந்த கந்தசாமி (58), ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் லாரி டிரைவர் செல்வகனியை கைது செய்து கரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், லாரி டிரைவர் செல்வ கனிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 31 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து, நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு அளித்தார். லாரி டிரைவர் செல்வகனி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News