உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் பலி

Published On 2023-07-13 12:57 IST   |   Update On 2023-07-13 12:57:00 IST
  • அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் பலியானார்
  • புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

வேலாயுதம்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் பூசாரிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 46). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று ஈரோடு-கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் நொய்யல் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு தார் சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சசிகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் சசிகுமாருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அவருடன் வந்த மற்றொரு டிரைவர் நந்தகுமார் சசிகுமாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சசிகுமாரின் மனைவி மோகனாம்பாள் (40) வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News