தென்னிலை அருகே கூலித்தொழிலாளி மர்ம சாவு
- தென்னிலை அருகே கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பழனி(வயது 44). இவர் தென்னிலை, மொஞ்சனூர் அருகே கருஞ்செல்லிபாளையம் பகுதியில் வேட்டாங்காடு தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி கடந்த 2 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரது மனைவியுடன், போனில் பேசியபோது வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார். பலமுறை தொடர்பு கொண்டும் கிடைக்காததால் அவரது மனைவி, தோட்ட உரிமையாளர் முத்துச்சாமிக்கு தகவல் கூறி உள்ளார். இதன் காரணமாக முத்துச்சாமி வந்து பார்த்தார். அப்போது மயக்க நிலையில் இருந்த பழனியை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து பழனி மர்மமாக இறந்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.