உள்ளூர் செய்திகள்
குளித்தலை நர்சிடம் செயின் பறிப்பு
- குளித்தலை நர்சிடம் மர்ம நபர் செயினை பறித்தார்
- இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
குளித்தலையை அடுத்த, வதியம் பஞ்சாயத்து நடுவதியம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி மாலினி (வயது 22). இவர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் மாலினியிடம் முகவரி கேட்பதுபோல் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.இதுகுறித்து, மாலினி கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.