உள்ளூர் செய்திகள்

வரலாற்று பேரவை துவக்கம்

Published On 2023-07-15 12:18 IST   |   Update On 2023-07-15 12:18:00 IST
  • கரூர் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று பேரவை தொடங்கப்பட்டது
  • ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்

வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை சார்பில், வரலாற்று பேரவைத்துவக்க விழா நடைபெற்றது.விழாவில் கல்லூரியின் தாளாளர் கோதை நடேசன் முன்னிலை வகித்தார். அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான முனைவர் நடேசன் தலைமை தாங்கினார். அரசு கல்வி நிறுவனங்களின் செயலாளர் இன்ஜினியர் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். 3-ஆம் ஆண்டு மாணவி தீபா வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் பெமிலா அலெக்சாண்டர் கலந்து கொண்டு இந்திய வரலாற்றில் பெண்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் ரதிதேவி, தர கட்டுப்பாட்டு அலுவலர் மோகன வடிவு மற்றும் வரலாற்று துறை பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மூன்றாம் ஆண்டு மாணவி கரிஷ்மா நன்றி கூறினார்.

Tags:    

Similar News