உள்ளூர் செய்திகள்

மனுநீதி நாள் நிறைவு முகாம்

Published On 2023-07-21 11:56 IST   |   Update On 2023-07-21 11:56:00 IST
  • மனுநீதி நாள் நிறைவு முகாம் நடைபெற்றது.
  • நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கரூர்

க. பரமத்தி ஒன்றியம், எலவனூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மனுநீதி நாள் நிறைவு முகாம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் ரூபினா தலைமை தாங்கினார். சின்னதாராபுரம் வருவாய் ஆய்வாளர் மகுடீஸ்வரன் வரவேற்று பேசினார். அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில், எலவனூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ கலந்து கொண்டு 291 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 69 ஆயிரத்து 619 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், எலவனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News