உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகே லாரி மோதி ஓட்டல் உரிமையாளர் பலி

Published On 2023-06-28 13:00 IST   |   Update On 2023-06-28 13:00:00 IST
  • பரமத்திவேலூர் அருகே லாரி மோதி ஓட்டல் உரிமையாளர் பலியானார்
  • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் பாலத்துறை பஜனை மடத்தெரு பகுதி சேர்ந்தவர் வீரப்பன் (வயது 60). பாலத்துறை பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் இவர், பரமத்தி வேலூர் சென்று விட்டு டவுன் பஸ்சில் திரும்பி உள்ளார். பாலத்துறையில் உள்ள தேசிய கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கரூர் நோக்கி வந்த லாரி ஒன்று வீரப்பன் மீது மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த வீரப்பன், ஆம்புலன்ஸ் உதவியுடன், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீரப்பனின் மனைவி ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிந்து, கரூர் அருகம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற லாரி டிரைவர் மீது வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News