உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

Published On 2022-08-31 12:48 IST   |   Update On 2022-08-31 12:48:00 IST
  • சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றது
  • வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக்கோரி

கரூர்:

வாழ்வாதார உரிமையும், வரையறுக்கப்பட்ட ஊதியமும், காலை உணவு திட்டத்தையும் சத்துணவு ஊழியரிடம் வழங்கக்கோரி முதல்வரின் கவனம் ஈர்க்க கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சுப்பிரமணியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் செல்வராணி நன்றி கூறினார்.

தர்ணாவில், காலை சிற்றுண்டி உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்தி விட்டு அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தி திட்டம் சிறப்படைய கட்டமைப்பு வசதியுடன் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிடவேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும்.

குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,000 வழங்கிடவேண்டும். காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிடவேண்டும். தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

Tags:    

Similar News