உள்ளூர் செய்திகள்

பெண் குழந்தை பலி

Published On 2023-07-17 11:44 IST   |   Update On 2023-07-17 11:44:00 IST
  • தொட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலியானது
  • அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பெருமாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 38) இவருடைய, இரண்டு வயது பெண் குழந்தை பவ்யா கடந்த, 14ல் வீட்டில் உள்ள தொட்டிலில் துாங்கி கொண்டிருந்தது. அப்போது, துாக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை, திடீரென கீழே தவறி தரையில் விழுந்தது. இதில், குழந்தை பவ்யாவுக்கு தலையில் அடிப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த குழந்தை பவ்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News