உள்ளூர் செய்திகள்

வெற்றிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

Published On 2023-10-04 11:57 IST   |   Update On 2023-10-04 11:57:00 IST
  • தளவாபாளையம், கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்வெற்றிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
  • இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கும்,

வேலாயுதம் பாளையம்,  

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை , நத்தமேடுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், மோதுகாடு, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலை வகைகளை பயிர் செய்துள்ளனர். இங்கு பறிக்கப்படும் வெற்றிலைகள், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் வெற்றிலை அசோசியேசன் வெற்றிலை மண்டிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 1,500-க்கும் வாங்கிச் சென்றனர். கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இல்லாததால் வெற்றிலை தேவை குறைவாக இருப்பதால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது

Tags:    

Similar News