உள்ளூர் செய்திகள்

குளித்தலையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-05-14 12:26 IST   |   Update On 2023-05-14 12:26:00 IST
  • குளித்தலையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
  • குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்று படுகையில் உள்ள சுடுகாடு அருகே நேற்று முன்தினம் சுமார் 82 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்து கிடந்தவர் பிச்சை (வயது 82) என்பதும், அவர் குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியில் அவரது மகன் பெரியசாமி என்பவருடன் வசித்து வந்ததாகவும், நேற்று முன்தினம் வெள்ளியணை பகுதியில் உள்ள தனது மற்றொரு மகன் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News