உள்ளூர் செய்திகள்

தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-29 12:16 IST   |   Update On 2023-07-29 12:16:00 IST
  • கரூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது

கரூர்,

கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், சி.ஐ.டியு.. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய, மாநில பா.ஜ., அரசுகனை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பகோரியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் முருகேசன், தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராஜா முகமது உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News