முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
- அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அளிக்க தீர்மானம்
கரூர்:
கரூர் மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம் (குளித்தலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது:-
தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று 2-வது முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இன்று மாலை நொய்யல் குறுக்கு சாலை மற்றும் கரூர் பஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும்.
அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு கரூர் அரசு விருந்தினர் மாளிகை 9 மணிக்கு தடாகோவில் உள்ளிட்ட பகுதிகளில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் நீண்ட காலம் பதிவு செய்து மின் இணைப்பு கிடைக்காதவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து முதற்கட்டமாக ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கி சாதனை படைத்ததற்கும், தொடர்ந்து 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை அரவக்குறிச்சியில் தொடங்கி வைக்கும் தமிழக முதல்-அஅமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது,
இந்தி திணிப்புக்கு எதிராக வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநில நிர்வாகிகள் நன்னியூர் ராஜேந்திரன், வழக்கறிஞர் மணிராஜ், பரணி கே.மணி, முனவர் ஜான், மாநகர செயலாளர் கனகராஜ், மாநகர பகுதி செயலாளர் கணேசன், அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா, வழக்கறிஞர் சுப்பிரமணியன், புகளூர் நகர செயலாளர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் குடியரசு உட்பட பலர் கலந்து கொ