உள்ளூர் செய்திகள்
வேலாயுதம் பாளையம் அருகே காவிரி ஆற்றில் பெண் சடலம்
- வேலாயுதம் பாளையம் அருகே காவிரி ஆற்றில் பெண் சடலம் மிதந்துள்ளது.
- வெள்ளைநிற சேலை அணிந்திருந்த படி மிதந்த சடலத்தை பார்த்தவர்கள், இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
கரூர்:
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியை சேர்ந்த சிலர் காவிரி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளனர்.அப்போது காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் தண்ணீரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்துள்ளது. வெள்ளைநிற சேலை அணிந்திருந்த படி மிதந்த அந்த சடலத்தை பார்த்தவர்கள், இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இறந்த பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர், குளிக்கும் போது தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டாரா அல்லது எவரேனும் அவரை கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிவிட்டனரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.