உள்ளூர் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
- குளித்தலையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்
- லிப்ட் கேட்டு ஏறி, துணிகர செயலில் ஈடுபட்டவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்
கரூர்,
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் கோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 29) இவர், தனக்கு சொந்தமான டூவீலரில், தோகைமலையில் இருந்து, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கள்ளை பிரிவு சாலை அருகே, டூவீலரை நிறுத்தி ஒருவர், 'லிப்ட்' கேட்டுள்ளார்.டூ வீலரை நிறுத்திய போது, திடீரென கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை பிடித்து, தோகைமலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், புழுதேரி கிராமத்தை சேர்ந்த பிச்சைமணி, (47) என்பது தெரியவந்தது. இவரை, போலீசார் கைது செய்தனர்.