உள்ளூர் செய்திகள்

புகழூர் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

Published On 2022-12-25 13:30 IST   |   Update On 2022-12-25 13:30:00 IST
  • தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
  • வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து தருவதாக மருத்துவ குழுவி–னர் தெரிவித்தனர்

கரூர் :

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகு–திகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொது–மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நெல்லை–யில் இருந்து ஒரு கால்நடை மருத்துவக்குழுவினர் புக–ழூர் நகராட்சிக்கு வந்த–னர். அவர்கள் அங்கு சுற்றித் திரிந்த 30-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். இந்த பணிகளை புகழூர் நகராட்சித்தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி ஆணையாளர் கனி–ராஜ், துப்புரவு ஆய்வா–ளர் ரவீந்தி–ரன் மற்றும் பணியா–ளர்கள் பார்வை–யிட்டனர். தினமும் 30 நாய்கள் வீதம் பிடிப்பதாகவும், சுமார் 500 நாய்களைப் பிடித்து அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், மேலும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து தருவதாக மருத்துவ குழுவி–னர் தெரிவித்தனர்.


Tags:    

Similar News