உள்ளூர் செய்திகள்
- பெண்ணிடம் செயின் பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
- இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், ராமானூர் பகுதியை சேர்ந்த குணசே கரன் மகள் யமுனா (வயது 28) இவர் வெள்ளியணை அருகே, காக்காவாடி பஸ் ஸ்டாப்பிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்தஅடையாளம் தெரியாத இரண்டு பேர், யமுனா கழுத்தில் அணிந்திருந்த ஒன்றேகால் பவுன், செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து, யமுனா அளித்த புகாரின்படி, வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.