வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
- பட்டப் பகலில் பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
க.பரமத்தி,
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள மலர்ச்சியூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவர் சின்ன தாராபுரத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். வழக்கம் போல் அவர் காலை வீட்டை பூட்டி விட்டு பேக்கரிக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் செயின் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது . இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று அதே பகுதியில் மேலும் சில வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பட்டப்பகலில் பேக்கரி உரிமையாளர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சின்னதாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது