வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
- புகலூர் ரயில்வே கேட் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே நிலையம் அருகே நடுத்தெரு பகுதி சேர்ந்தவர் மூர்த்தி (48). இவர் புகளூர் டிஎன்பிஎல் காகிதாஆலையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வளர்மதி(40) அருகாமையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந் நிலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு மூர்த்தியும் ,அவரது மனைவி வளர்மதியும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மூர்த்தி வேலை முடித்துவிட்டு வேலாயுதம்பாளையத்தில் உள்ளஅவரின் அக்காவை பார்த்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவில் லாக்க்கர் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.