உள்ளூர் செய்திகள்

ரூ.1.5 கோடி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை

Published On 2022-12-03 14:59 IST   |   Update On 2022-12-03 14:59:00 IST
  • ரூ.1.5 கோடி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது
  • தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்

கரூர்:

கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, ராச்சாண்டர் திருமலை ஆகிய ஊராட்சி பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை, வாய்க்கால் படித்துறை, நெல் அடிக்கும் தளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்காக சுமார் 1.5 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கான பூமி பூஜை விழாவை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தோகைமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, நெய்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா வேலாயுதம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம், முதலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், சேப்பலாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், ராச்சாண்டர்திருமலை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பால மூர்த்தி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காந்தி, நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், குளித்தலை நகரப் பொருளாளர் தமிழரசன்ம ற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News