உள்ளூர் செய்திகள்

காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது

Published On 2023-07-14 14:31 IST   |   Update On 2023-07-14 14:31:00 IST
  • காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கபடவுள்ளது
  • விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங் களை மாவட்டம் அல்லது வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

கரூர்,

பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களுடன் விருது வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் இணையதளம் மூலமோ அல்லது மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பங்களை பூர்த்திசெய்து மாவட்ட அல்லது வட்டார அலுவல கங்களில் சமர்ப்பிக்கவேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவில் பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டரால் அரசு நிகழ்வு அல்லது விழாக்களின் போது சான்றிதழ்களுடன் விருது வழங்கப்படவுள்ளது.

முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம். பாரம்பரிய காய்க றிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கான விருதுக்கு சொந்த அல்லது குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடிசெய்யும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டு எடுத்தல், பிறவிவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர்மேலாண்மை, முறையான மண்வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய கார ணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் தோட்டக்கலை இணை, துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியா ளர் (வேளாண்மை) ஆகியோர் அடங் கிய மாவட்ட அளவிலானதேர்வுக்குழு மாவட்ட அளவிலான விருது பெறும் இரண்டு விவசாயிகளை ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பார்கள். விண்ணப்பம் https://www.tnhorticulture.tn.gov.in/ என்ற இணையதளம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும். விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங் களை மாவட்டம் அல்லது வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News