வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் தகராறு
- கடவூர் அருகே வாகன சோதனையில் போலீசாரிடம் இருவர் தகராறில் ஈடுபட்டனர்
- தகராறில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு உள்ளனர்
கரூர்,
கரூர் மாவட்டம் கடவூர் அருகே மாவத்தூர் ஊராட்சி ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரம் மகன் தினேஷ்குமார் (வயது 25). இவர் டிரைவாக வேலை பார்த்து வருகிறார். இதே போல் இதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரவிச்சந்திரன் (52) இவர் தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தர கம்பட்டி பகுதியில் இருந்து ரெட்டியபட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ரெட்டியப்பட்டி குஜிலியம்பாறை பிரிவு ரோட்டில் பாலவிடுதி எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது தினேஷ்குமார் தலைக்கவசம் அணியாமல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோத னைக்காக நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளின் ஆவணங்
களை போலீசார் கேட்ட போது தினேஷ்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கெட்ட வார்த் தைகளால் திட்டி உள்ளனர். வாகனத்தணிக்கை செய்வதற்கு யார் அதிகாரம் வழங்கியது? என்றும், இனி இந்த பகுதியில் வாகனதணிக்கை செய்யக் கூடாது என்றும் இருவரும் போலீசாரை மிரட்டிய தோடு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து பாலவிடுதி எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி பாலவிடுதி காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தினேஷ்குமார் மற்றும் ரவிச்சந்தி ரன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.