உள்ளூர் செய்திகள்

கரூரில் மனித கடத்தல் தடுப்பு பயிற்சி முகாம் - கலெக்டர் பிரபு சங்கர் பங்கேற்பு

Published On 2022-07-31 15:21 IST   |   Update On 2022-07-31 15:21:00 IST
  • கரூர் மாவட்டத்தில் புதிய முயற்சியாக வாட்ஸ்அப் எண் 890 333 1098 உருவாக்கப்பட்டு அதன் மூலம் குழந்தைகளின் புகார்கள் பதிவு செய்யப்படுகிறது
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இரு ப்பதற்காக நமக்கு காவல்துறையும், நீதித்துறையும் பக்கபலமாக உள்ளது.

கரூர் :

உலக மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு- மனித கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில், குற்றவில் நடுவர் நீதியரசர் செ.ராஜலிங்கம் முன்னிலையில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை, தொண்டு நிறுவனம் மூலம் மனித கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான பயிற்சி முகாம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியது,

கரூருக்கு பெண்கள் அதிகளவில் வேலைக்கு வருகின்றனர். வயதான முதியவர்களிடம் தங்களது குழந்தைகளை ஒப்படைத்து விட்டு வருகிறார்கள். அந்த குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வரப்படுகிறது.

மேலும், வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வகையான தாக்குதல்களை தடுப்பதற்கு நாம் பல்வேறு வகையிலான அமைப்புகளை உருவாக்கி பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

கரூர் மாவட்டத்தில் புதிய முயற்சியாக வாட்ஸ்அப் எண் 890 333 1098 உருவாக்கப்பட்டு அதன் மூலம் குழந்தைகளின் புகார்கள் பதிவு செய்யப்படுகிறது அந்த வகையில் 600க்கும் மேற்ப ட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் இருந்தும் புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இரு ப்பதற்காக நமக்கு காவல்துறையும், நீதித்துறையும் பக்கபலமாக உள்ளது.

கரூர் மாவட்டத்தை பொருத்தவரை குழந்தை கடத்தல், பெண் குழந்தைகள் உள்ளிட்ட குழந் தைகளுக்கு பல்வேறு வகையான பாதிப்புகளை தடுத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்கள் பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி தவறு நடைபெறும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொண்டு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு வழங்கும் பயிற்சியை நல்ல முறையில் கற்று எதிர்வரும் பிரச்சனைகளை கையாண்டு கரூர் மாவட்டம் மனித கடத்தலுக்கு எதிராக நல்ல நிலையில் சிறப்பாக செயல்பட்டு கரூர் மாவட் டம் பெண்களுக்கு பாதுகாப்பான மாவட்டம் என்பதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கு ழந்தை பாதுகாப்பு அலுவலர் குணசீலி, மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சித்ராதேவி, மாவட்ட சமூக நல அலுவலக பாதுகாப்பு அலுவலர் பார்வதி உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News