உள்ளூர் செய்திகள்

வேலாயுதம்பாளையம் அருகே தென்னை மரங்களில் திடீர் தீ

Published On 2023-07-07 13:50 IST   |   Update On 2023-07-07 13:50:00 IST
  • வேலாயுதம்பாளையம் அருகே தென்னை மரங்களில் திடீரென தீ பிடித்தது
  • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தென்னைமரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர்.

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம் நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 40). இவரது தோட்டம் அருகாமையில் உள்ள வெள்ளதாரையில் தென்னங்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று தென்னை மரங்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அரவிந்த் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார். இருப்பினும் தீயணைக்க முடியவில்லை. காற்றின் காரணமாக தீ மள மள வென வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது. இது குறித்து உடனடியாக அரவிந்த் புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தென்னைமரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். இதனால் தீ பக்கத்து தோட்டங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

Tags:    

Similar News