உள்ளூர் செய்திகள்
- ஓராண்டு நடைபயணம் நிறைவு பேரணி நடைபெற்றது
- காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது
கரூர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் இந்திய ஒற்றுமை நடை பயணம் முதலாம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் பேரணி நடந்தது.
எம்.பி ஜோதிமணி தலைமை தாங்கினார். மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன், நகரத் தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட சேவாதள தலைவர் தாந்தோணி குமார், மாவட்ட பொருளாளர் மெஞ்ஞான மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் கோகுலே, சண்முகம், எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் முனீஸ்வரன், வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், மலையாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.