உள்ளூர் செய்திகள்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய டீன் பொறுப்பேற்பு
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய டீன் பொறுப் பேற்றுக்கொண்டார்
- டாக்டர்கள், துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கரூர்
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பணியாற்றி வந்த முத்துச்செல்வன், சமீபத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை அடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கண் சிகிச்சை துறை பேராசிரியராக இருந்த சீனிவாசன், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமனம் செய்யப்பட்டார். நேற்று காலை சீனிவாசன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு டாக்டர்கள், துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.