உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு ரூ.39 லட்சத்தில் மேஜைகள் - எம்.எல்.ஏ.வழங்கினார்

Published On 2022-06-15 12:47 IST   |   Update On 2022-06-15 12:47:00 IST
  • அரசு பள்ளிகளுக்கு ரூ.39 லட்சத்தில் மேஜைகள் வழங்கப்பட்டது.
  • ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்

கரூர்:

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் அமர்வதற்கு இருக்கைகள் டெஸ்க் மற்றும் மேஜைகள் வேண்டுமென்று எம்.எல்.ஏ. இரா மாணிக்கத்திடம் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குளம், தோகைமலை, அய்யர்மலை, கோட்டைமேடு, குளித்தலை ஆகிய பகுதிகளில் உள்ள 5 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.39 லட்சம் மதிப்பில் டெஸ்க் மற்றும் மேஜைகளை எம்.எல்.ஏ. ரா மாணிக்கம் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமர், ஒன்றிய செயலாளர் சூரியனூர்ச ந்திரன், குளித்தலை நகர்மன்றத் தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, தோகைமலை மேற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் பள்ளிப்பட்டி கருப்பையா, முன்னால் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரசாந்த், ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால், தொகைமலை கிளை செயலாளர் வடிவேல்,

வைகநல்லூர் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் பெரியசாமி, நகரத் துணைச் செயலாளர் கே எம் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன, குளித்தலை நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News