உள்ளூர் செய்திகள்
வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள் மாயம்
- கரூரில் வீட்டில் வைத்து இருந்த 10 பவுன் நகைகள் மாயமானது
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்
கரூர்,
கரூர் செங்குந்தபுரம் 10-வது கிராஸில் வசித்து வருபவர் ஜெகதீபன் (வயது 54). இவர் தனது வீட்டில் இருந்து வெளியே சென்று இருந்த சமயம் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் யாரோ ஒருவர் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் மதிப்புள்ள தங்க செயினை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து ஜெகதீபன் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு விரைந்து சென்ற கரூர் நகர சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் வீட்டில் அருகில் இருந்தவர்களிடமும், வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் கரூரில் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது.