உள்ளூர் செய்திகள்

தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.

டெல்லியில் நடக்கும் கராத்தே போட்டிக்கு தருமபுரி மாணவ, மாணவியர் தேர்வு

Published On 2022-07-25 09:46 GMT   |   Update On 2022-07-25 09:46 GMT
  • தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
  • டெல்லி நடைபெறும் தேசிய அளவில் கராத்தே போட்டியில் பங்கு கொள்ள இருப்பதாக தென்னிந்திய கராத்தே அசோசியேஷன் தலைவர் நடராஜ் தெரிவித்தார்.

தருமபுரி,

தருமபுரியில் தென்னிந்திய கராத்தே அசோசியேசன் தலைவர் கிராண்ட் மாஸ்டர் கியோ சி நடராஜ் முன்னிலையில் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

போட்டியில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு கட்டா டீம், கட்டா மற்றும் குமித்தே பிரிவுகளில் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு கிராண்ட் மாஸ்டர் கியோஷி நடராஜ், கிருஷ்ணகிரி ஷிகான் மாரியப்பன் ஆகியோர் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

சென்ற மாதம் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் டெல்லி நடைபெறும் தேசிய அளவில் கராத்தே போட்டியில் பங்கு கொள்ள இருப்பதாக தென்னிந்திய கராத்தே அசோசியேஷன் தலைவர் நடராஜ் தெரிவித்தார்.

Tags:    

Similar News